பூண்டுலோயாவில் லொறி விபத்து – ஒருவர் காயம்

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் பேர்லண்ஸ் பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து, இன்று காலை நேர்ந்துள்ளதாக பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கும் போது, வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மேற்படி லொறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக லொறியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply