தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று!

<!–

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று! – Athavan News

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை (புதன்கிழமை) ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் சுமார் 98 ஆயிரத்து 151 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 2 ஆயிரத்து 981 பேர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த தேர்தலுக்காக 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முதற்கட்டமாக 41 இலட்சத்து 93 ஆயிரத்து 996 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply