
தென்னிலங்கையில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சில இளைஞர்கள் ராஜபக்ஸவினர் சின்னமான சிவப்பு சால்வையுடன் நண்பரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, புதுமணத் தம்பதிகளுக்கு ‘பால்மா, டீசல்’ என பெயரிட்டு விநோதமான அன்பளிப்பும் வழங்கியுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டும் முகமாக இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.