
கொழும்பு, ஜுன் 22
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.