பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்காக அழைத்துள்ளார் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச.
இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக மஹர தேர்தல் தொகுதியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பசில் ராஜபக்ச அரசாங்கத்தில் ஒருபோதும் எந்தவொரு பதவியையும் பெறப்போவதில்லையெனவும் தனது அரசியல் பயணம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்