பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய சில அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்திற்கான திகதி குறித்த உத்தியோக பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
பதவி ஏற்றது முதல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த சந்திப்பு திட்டமிடப்படாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை இந்தியாவிடம் மேலதிகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியினை கோரியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது குறித்த கடனுதவி தொடர்பான ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான கோரிக்கையினை அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்

