
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சற்று முன்னர் சத்தியபிரமாணம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற நிலையில் அவர் இவ்வாறு சத்தியபிரமாணம் செய்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டார்.
இதன்படி, தம்மிக்க பெரேரா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்புரிமையை அண்மையில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.