இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி 12 மில்லியன் மோசடி !!

<!–

இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி 12 மில்லியன் மோசடி !! – Athavan News

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனியில் வசிக்கும் சந்தேகநபர் பதுளையில் உள்ள ஒருவரிடம் வாகனம் வாங்குவதற்காக பணத்தை மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரிடம் இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை காட்டி ஏமாற்றியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதுடையவர் என்றும்குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *