பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட வீட்டின் முன்னால் சற்றுமுன் திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் உமாச் சந்திர பிரகாஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருணிகா பிரேமச்சந்திரன் போன்றவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதோடு ரணிலின் வீட்டிற்குள் செல்ல முற்பட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றதோடு ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்ட காரர்களால் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக கோசங்களை எழுப்பி உள்நுழைய முற்பட்ட வேளை இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உமாசந்திர பிரகாஸ் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டிலிருந்து வெளியே வருமாறு ஆக்ரோசமாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர்.