நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன் – தம்மிக்க!

நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தம்மிக்க பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், ‘நாட்டிற்குப் பணி செய்யவே நான் இங்கு வந்தேன். நான் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னதாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளையும் வரி அனுமதி அறிக்கைகளையும் சபாநாயகரிடம் சமர்ப்பித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன். இப்போது என் கடமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான். அதை செய்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன். நல்லதொரு அமைச்சு கையளிக்கப்படும் என நினைக்கிறேன்.

எனவே எப்படியிருந்தாலும் எனது பங்களிப்பு என்னவென்றால், நான் நாட்டின் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். எனவே நான் எந்த அமைச்சகத்தைப் பெற்றாலும் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் இங்கு வந்தேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *