இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடியத் தூதர் டேவிட் மெக்கினன், இன்றையதினம் யாழ். தனியார் ஹோட்டல் ஒன்றில் யாழ். கடற்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினால் கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடல் தொடர்பாக யாழ். கடற்தொழிலாளர் சமாசனங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா ஊடகத்துக்கு தெரிவிக்கையில்,
எதிர்வரும் காலங்களில் எங்கள் சமூகம் பட்டினி சாவினை எதிர்கொள்ள இருக்கின்றது. இதிலிருந்து எம்மை காப்பாற்றுவதற்குரிய ஆவணம் செய்ய வேண்டும் என கனேடியத் தூதரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு, நவீனமயமாக்கப்பட்ட ஆழ்கடல் மீன் பிடித்துறையினை மேற்கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும்.
வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருள், மண்ணெண்ணெய், மீன்பிடி உபகரணங்கள் ஆகிவற்றை வழங்கி பொருளாதார சிக்கல்களினை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

கனேடியத் தூதர் டேவிட் மெக்கினன் நேற்றைய தினம் யாழ். மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டு யாழ் மாநகர முதல்வரை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

