எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல்!

மீகொட பிரதேசத்தில் முகக்கவசம் அணியுமாறு கூறியதால், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

மீகொடை புதிய வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் முகக்கவசமின்றி எரிபொருள் நிலையத்துக்கு வருகை தந்துள்ளமையுடன், அவரை முகக்கவசம் அணியுமாறு அங்கிருந்த பணியாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதனால், கோபமுற்ற நபர் மற்றுமொரு நபருடன் வந்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த நபரை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர், பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply