90 மில்லியன் டொலருக்கு எரிவாயு இறக்குமதி: ரணில்

கொழும்பு, ஜூன் 22: 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கி வழங்கவுள்ள 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

இதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை,  இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *