4 பில்லியன் டொலர்கள் இந்திய கடன் மூலம் இலங்கை பெற்றுள்ளது

கொழும்பு, ஜுன் 22

இந்திய கடன் மூலம் இதுவரை சுமார் 4 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”நாங்கள் இந்தியாவிடமிருந்து அதிக கடன்களைக் கேட்டுள்ளோம். ஆனால் இந்தியா எங்களுக்கு தொடர்ந்து கடன் கொடுக்க முடியாது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அமைப்பை நாங்கள் வகுக்க வேண்டும். ஆனால், கொடுப்பது பற்றி விவாதிக்க யாரும் எங்களுக்கு பணம் தருவதில்லை” என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *