அரிசி விலையை உயர்த்தும் பேச்சுக்கே இடமில்லை! வெடித்து மோதல் 

அடுத்த 3 மாதங்களுக்கு அரச கட்டுப்பாட்டு விலைக்கே அரிசி விற்பனை செய்யப்பட வேண்டும் என இலங்கையின் முன்னணி அரிசி வியாபாரி டட்லி சிறிசேன அரிசி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இதுவரை இல்லாத நெல் கையிருப்புகளை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

டட்லி அரிசி மாபியா என அழைக்கப்பட்ட போதிலும், தற்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் மாபியாக்களை சுமந்து செல்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், ஒரு கிலோ அரிசியை மக்கள் வாங்க முடியாத நிலையில் மக்கள் சார்பாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ரத்னா அரிசியின் உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால, அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முடியாது என தெரிவித்தார்.

இதை அடுத்து கோவத்தில் கொதித்தெழுந்த டட்லி சிறிசேன, ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *