எந்த சொந்தமாக இருந்தாலும் உறவும் அரசியலும் வெவ்வேறு! – அமைச்சர் நாமல்

எந்த சொந்தமாக இருந்தாலும் உறவும் அரசியலும் இரண்டு வெவ்வேறு விடயங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் நிரூபமா ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நிரூபமா ராஜபக்ஸ எனது சகோதரியாக உள்ளார். எனினும், அரசியல் ரீதியாக அவர் எம்முடன் இல்லை. அவர் கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் தலைவர் சிறிசேனவுடன் இருந்தார்.

அதனால், உறவு வேறு அரசியல் வேறு. மேலும், அவர் நடேசனை மணந்துள்ளார். திருமணத்தால் கிடைப்பவை தொடர்பில் நம்மால் என்ன செய்ய முடியும்.

மேலும், 1990 – 1998 வரை இவர்கள் பணம் சம்பாதித்து வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யார் இருந்தார்கள் என்பதை ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்,

Leave a Reply