தேர்தல் முறை மாற்றம்: நாடாளுமன்றில் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

கொழும்பு, ஜுன் 22

தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த தெரிவுக்குழுவின் தலைவர் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தனவினால் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உள்ளுராட்சிமன்றங்கள், மாகாண சபை மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பிலான 25 கண்காணிப்புக்கள் மற்றும் 15 பரிந்துரைகள் அதில் அடங்குவதாக நாடாளுமன்ற சபை முதல்வர் காரியாலயம் தெரிவித்துள்ளது. கலப்பு தேர்தல் முறை தொடர்பான யோசனைகளும் அதில் உள்ளடங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *