அறுவை சிகிச்சையில் விஜயகாந்த்தின் வலது காலில் உள்ள 03 விரல்கள் அகற்றம் : வெளியான காரணம்!

கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிகர் விஜயாகாந்தின் காவல் நிலைய சண்டைக் காட்சியில் அவர் தனது கால்களால் சும்மா புகுந்து விளையாடி இருப்பார்..!

அதனை தொடர்ந்து பல படங்களிலும் சண்டைக்காட்சி என்றால் அடி ஒன்றும் இடி போல இருக்க வேண்டும் என்பதற்காக டூப் போடாமல் சண்டைகாட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்ததால் ரசிகர்களால் கேப்டன் என்று கொண்டாடப்பட்டவர்.

அரசியலுக்கு வந்து தமிழகத்தின்எதிர்கட்சி தலைவர் என்ற உயரத்தை எட்டிப்பிடித்த விஜய்காந்த், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த சிலகாலமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வில் இருந்தார்

இந்த நிலையில் உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதோடு காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து அவரது வலது காலில் உணர்வற்று காணப்பட்ட 3 விரல்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாகவும், அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *