தற்போது நடந்து கொள்ளும் விதம் கவலையளிக்கிறது: ரணில்

கொழும்பு,ஜுன் 22

அரசியல் பாடத்தை தன்னிடம் கற்றவர்கள் தற்போது நடந்துகொள்ளும் விதம் தொடர்பில் கவலையடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (22) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர், தன்னால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தெரியாமல் இருப்பதாகவும், இதை பார்க்கும் போது தனக்கு கவலை ஏற்படுவதாக தெரிவித்தார்.

அத்தோடு, ஆட்சியில் இருக்கும் போது அதிகாரத்தைக் கண்டு ஓடினர், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் ஓடுகின்றனர். இப்படி இருக்கும் போது எவ்வாறு அவர்களால் நாட்டை பொறுப்பேற்று ஆட்சி நடத்த முடியுமெனவும் பிரதமர் சபையில் வைத்து கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *