
யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டையிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் பிற்பகல் கடலுக்குச் சென்று இன்று காலை 10 மணியளவில் கரை திரும்ப வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் ஊடாக தேடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளை எரிபொருள் இன்றி தாம் அவர்களை தேடமுடியாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்

