மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு தடை உத்தரவு

மின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

அத்துடன் குறித்த தினத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கான மின்சார விநியோக நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *