
கல்வி அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முக்கிய “கோட்டகோகம” செயற்பாட்டாளர்கள் ஜூலை 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் மற்றும் இலங்கை பொலிஸாருக்கு எதிராக கடந்த மே மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
குறித்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த பத்து சந்தேகநபர்கள் மருதானை பொலிஸில் இன்று சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் யூடியூபர் ரதிது சுரம்யா என்றழைக்கப்படும் ரட்டா, மாணவர் சங்கத் தலைவர் வசந்த முதலிகே மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் லஹிரு வீரசேகர ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் அடங்குவர்.
பிற செய்திகள்

