யாழில் எரிபொருள் பவுசரை வெளியே செல்லவிடாது குழப்பம்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றையதினம் எரிபொருளை இறக்குவதற்கு வருகைதந்த எரிபொருள் பவுசரை அவ்விடத்தை விட்டு வெளியே செல்லவிடாது பொதுமக்கள் தடுத்தமையினால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதான வீதி யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வந்த பவுசர் வண்டியிலிருந்த மிகுதி எரிபொருளினையும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வழங்குமாறு வழங்காவிட்டால் பவுசரை வெளியேறுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடபிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுத்ததோடு ரோசரி கொண்டுவரப்பட்ட எரிபொருளை குறித்த எரிபொருள் நிரப்புநிலையத்தில் இறக்கிய பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *