மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவன்! திருமலையில் கொடூர சம்பவம்

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் பெண்ணொருவர் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வீ.திவ்யா (30 வயது) என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபோதையில் வந்த கணவன், மனைவியான குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *