யாழில் பணத்தை தொலைத்த மூதாட்டி: மீட்டுக் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்

யாழ்ப்பாணம்,ஜுன் 22

யாழ்ப்பாணம்த்தில் பேருந்தில் மூதாட்டியொருவர் தொலல்த 96,000 ரூபாய் பணத்தை யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிசார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

யாழ் நகரிலுள்ள வங்கியில் 96,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு, சுன்னாகம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில்  62 வயதான மூதாட்டியொருவரும் பயணித்தார். அவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் இறங்கி நடந்து வந்துள்ளார்.

நடந்து செல்லும் போது பணப்பையை சோதித்தார். அதற்குள் பணம் இருக்கவில்லை.
அந்த பகுதியில் யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கடமையில் இருந்துள்ளனர். அவர்களிடம் நடந்த சம்பவம் தொடர்பாக அழுதவண்ணம் முறையிட்டுள்ளார்.

துரிதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், மூதாட்டியின் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, பேருந்தை விரட்டிச் சென்றனர்.

கொக்குவில் பகுதியில் பேருந்தை வழிமறித்து,  இந்த தேசிய அடையாள அட்டைக்குரியவர் பயணம் செய்யும் போது, குறிப்பிட்டளவு பணத்தை இழந்துள்ளார், பேருந்தையும், ஆட்களை இறக்கியும் சோதனையிடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

பொலிசார் ஆரம்பத்தில் சோதனையிட்ட போது, பேருந்திற்குள் பணம் தவறி விழுந்திருக்கவில்லை.
ஆட்களை இறக்கி சோதனையிட ஆரம்பித்த பின்னர், ஆசனமொன்றின் கீழே பணம் இருப்பது தெரிய வந்தது.

அதில் 89 ,000 ரூபாய் பணம் இருந்தது . சம்பவ இடத்திற்கு வந்த மூதாட்டி, கிடைத்த பணத்தை பெற்றுச் சென்றார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்களால் இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *