ஜம்மு – காஷ்மீரில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

ஜம்மு – காஷ்மீரில் மேகவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த மழை காரணமாக மழை கிராமமான Kishtwar இல்  10 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 17 பேர் உயிரிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை காணாமல்போயுள்ளவர்களை தேடும் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினருடன், விமானப்படையினரும், ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *