மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

கொழும்பு, ஜுன் 23

மண்ணெண்ணெய் விலையை இந்த மாத இறுதிக்குள் அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகின்றது. இருப்பினும் அந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 283 ரூபாய் வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு நட்டம் ஏற்படுவதைத் தடுப்பதாக இருந்தால் மண்ணெண்ணெய்யின் விலையை லீற்றருக்கு 370 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *