IMF பிரதிநிதிகள் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வந்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலவரங்கள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *