
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமே வெளிநாடுகளிடம் இருந்து ஒத்துழைப்பை பெற முடியும் என 11 சுயாதீன கட்சிகள் அணி தெரிவித்துள்ளது.
ரஷ்ய தூதுவருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அந்த அணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நாட்டின் நெருக்கடி நிலையை உரிய வகையில் தீர்த்து கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டில் தற்போது பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைளை மேற்கொள்வதற்கான எந்தவித முன்னாயத்தங்களையும் முன்னெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை மாத்திரம் பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதன்மூலம் உடனடியாக கிடைக்கப்பெறக் கூடிய உதவிகளையும் அரசாங்கம் நழுவவிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
பிற செய்திகள்

