நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தினந்தோறும் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களை பயன்படுத்துவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஹோமாகம கொடகமவில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களாக பெற்றோல் நிரப்ப காத்திருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மலசல கூடம் செல்லவேண்டி இருந்தது. அவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் உள்ள கடைக்கு சென்று அந்த உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளார் அதற்கு அவர் அங்கிருந்த மலசல கூடத்திற்கு செல்லுமாறு கூறினார்.
இதனையடுத்து அவர் தனது கடமையை நிறைவேற்றி வந்து அந்த கடை உரிமையாளருக்கு நன்றி சொன்னபோது அவரிடம் மலசல கூடம் சென்றமைக்கு 100 ரூபா கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக பொருட்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் ஒருவர் தனது இயற்கை கடனையும் செலுத்துவதற்கு இவ்வாறு கண்மூடித் தணமாக கட்டணம் அறவிடப்படுவது தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்

