ஹிருணிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் – ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது: பிரதமர்

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர, பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட அவமானகரமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் விடயமாக ஹிருணிகா தனது இல்லத்திற்கு வந்ததாகவும்  அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *