ஹாலிவுட்டில் களமிறங்கிய யாழ் இளைஞன்!

யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட கனடிய தமிழன் லெனின் சிவம் ஹாலிவுட்டில் The Protector என்ற ஆங்கில திரில்லர் திரைபடத்தை இயக்கியிருக்கிறார்.

அவர் ஏற்கனவே மூன்று தமிழ் திரைபடங்களை இயக்கியுள்ளார்.அவருடைய தந்தையார் கம்னியூஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தமையால் அவருக்கு லெனின் என்ற பெயரை அவருக்கு சூட்டியதாக கூறுகிறார்.

அத்துடன் அவரது தந்தையார் இலங்கை சினிமா ஒன்றில் கதாநாயகனாக நடித்தவர் என்று கூறப்படுகிறது.ஆனால் எந்த திரைபட கதாநாயகன் என்று தெரியவில்லை.இவரது சொந்த உடுப்பிட்டி கிராமத்தில் உள்ள வைரவ கோவிலை பற்றி கூறுகிறார்.

அத்துடன் அந்த சூழலில் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் இந்த திரில்லர் கதைகளின் கரு உருவாக அடிப்படையாக அமைந்தவை என கூறுகிறார்.இவர் இயக்கிய The Protector’. என்ற இந்த ஆங்கில திரைபடம் மிக பிரபலமயமான சர்வதேச Fantasia திரைபடவிழாவுக்கு தெரிவாகியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *