தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் உளவளத்துணை பிரிவினை விஸ்தரிக்கும் முகமாக ஒரு தொகை தளபாடங்கள் யுனிசெப் நிறுவன அனுசரனையில் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த தளபாடங்களை பிரதேச செயலகத்தில் வைத்து ( 22) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
யுனிசெப் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில், தொழில்வாண்மை உளவியல், உளவளத்துணை மையத்தின் ஊடாக பிரிவினை மேம்படுத்தும் நோக்கில் இது வழங்கப்பட்டன.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,உளவளத்துணையாளர் மா.கொன்சலீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


பிற செய்திகள்

