யாழ். மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது என யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் தெரிவித்தார்.
சமூகம் மீடியாவுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்ப்பாண மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளினை முன்னெடுப்பதற்கு திடசங்கற்பம் கூறப்பட்டடிருந்தது.
இதனால் பல அபிவிருத்திகள் வர இருந்தன. நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இயலுமான அளவிற்கு வேலைப்பாடுகள் ஸ்தம்பிதமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் யாழ்.மாநகரசபை மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.
யாழ். மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய திண்மக் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்கப்பட்டது. இதற்கமைய யாழ் மாநகரசபைக்கு உட்படட 27 வட்டாரங்களுக்கும் ஒரு உழவு இயந்திரம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த போதும், தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள்நெருக்கடியினால் 9 இயந்திரங்களே திண்மக் கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.
இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவத்தினை உருவாக்கியுள்ளது. இதில் யாழ் மாநகராசபைக்கு உட்பட்ட 9 இடங்ளில் மக்கள் கழிவுகளை தரம் பிரித்துக் கொண்டு ஒப்படைக்கின்ற இடங்களாக பிரகனப்படுத்தி இருக்கின்றோம்.
இதனை வரும் காலங்களில் பத்திரிகை வாயிலாக பகிரங்கப்படுத்துவோம். குறித்த இடங்களில் மேற்கொள்ளவிருக்கின்ற செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டு காலை 6.00 தொடக்கம் மாலை 6 .00 மணி வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வாரத்தில் ஒரு தடவை கழிவகற்றல் வாகனம் மக்களின் வீடுகளில் இருக்கின்ற கழிவுகளை அகற்ற பயன்படும். இதற்கான நேர அட்டவனை தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே இந்த இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவதற்காக மக்கள் பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும். அத்துடன் இயலுமான அளவிற்கு கழிவுகளை குறையுங்கள்.
மேலும் எமது ஊழியர்கள் ”பணம் தந்தாள் தான் கழிவகற்றுவோம்” என அழுத்தம் கொடுத்தால் அதனை யாழ்.மாநகரசபைக்கு அறிவித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றார்.
பிற செய்திகள்

