பட்டினிச் சாவை தடுக்க வீடுகளில் பயிர் செய்கையினை மேற்கொள்ளுங்கள்-வல்வை நானந்தராஜ் கோரிக்கை!

கல்வி அமைச்சில் கல்வி பிரதி பணிப்பாளராக பணியாற்றிய வல்வை நானந்தராஜ் அவரிடம் நாட்டின் பொருளாதார நிலை பற்றி விசாரித்த பொழுது , தற்பொழுது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையானது ,இலங்கை மக்களை பாதிக்கின்றதை விட தமிழ் மக்களே கூடுதலாக பாதிக்கின்றது .

இவ்வாறான நிலை எங்களுக்கு புதிது அல்ல ,பழக்கப்பட்ட ஒன்றே , இதற்கு முன்னரும் ,இவாறான பிரச்சனைகள் காணப்பட்டன .ஆனால், இவ்வாறான ஒரு நிலையில் நாங்கள் இருந்ததில்லை . ஒருவரை நம்பியே நாம் வாழ்கின்றோம் .

என்னிடம் கூட கேள்விகள் எழும்பின ,ஏன் தமிழ் மக்கள் காலி முகத்திடல் போராடத்தில் பங்கு கொள்ளவில்லை ? என்று , அதில் கோடபாயவை மாற்ற வேண்டும் ,அரசியலை மாற்ற வேண்டும் என்பதே , போராட்டத்தின் கருத்து ;
எங்களுக்கு யார் இருந்தாலும் சரி ,எங்களின் எதிர்பார்ப்பு அரசியல் மாற்றமே ,சமமாக வாழலாம் என்ற நிலை வந்தால் மாத்திரமே வாழ முடியும் , இந்த விடயத்தை போராட்ட காரர்கள் முன்வைக்கவில்லை. முன் வைத்திருந்தால் பங்கு பற்றி இருப்போம் .

ஒவ்வொரு பொருட்களின் விலையும் 4 மடங்கு உயர்ந்திருகின்றது .

ரணில் அண்மைய காலத்தில் உரை ஒன்று ஆற்றி இருந்தார் . தீர்க்க தரிசனம் இல்லாத உரை ஒன்று .பொருட்களின் விலை ஒரு நாளும் குறைய வாய்ப்பில்லை ஆனால் மக்கள் தங்களின் வருவாய்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் . முட்டால் தனமான பேச்சுகளும் இடம்பெறுகின்றது .வருமானத்தை ஈட்ட வேண்டியது மக்களா? அரசாங்கமா ?
அரசாங்கம் வாய்ப்புகளை வழங்க வேண்டும் . வருமானத்தை எப்படி உயர்த்துவது ? மக்களை களவுக்கு செல்ல சொல்லுகின்றனரா ? மக்களை பற்றிய தூர நோக்கு பிரதமரிடம் காணப்படுவதில்லை .

ஏனைய மக்களை விட தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர் . நான் ஒரு கல்வி அமைச்சர் என்ற வையில் கூறுகின்றேன் .

ஒவ்வொருவரும் வீடுகளில் பயிர் செய்கையினை மேற்கொள்ளுங்கள் .இட வசதி இல்லாவிட்ட்டால் , சாடிகளிலாவது வையுங்கள் .
தமிழ் மக்களின் நிலை பட்டினி சாவை நோக்கியே போகின்றது . இவ்வாறு செய்தால் மாத்திரமே , மக்கள் ஓரளவு என்றாலும் நிமிர்ந்து நிக்க முடியும் .

பொறுப்புகள் அத்தனையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் யாரிடமும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப திட்டங்கள் இல்லை என்று கூறினார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *