ஹட்டனிலிருந்து சட்டவிரோத முறையில் அனுப்படவிருந்த எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

ஹட்டன்,ஜுன் 23

ஹட்டன் பகுதியில் கொழும்புக்கு சட்டவிரோதமுறையில் எரிவாயுவினை அனுப்புவதற்காக பதுக்கி வைத்திருந்த ஒரு தொகை சமையல் எரிவாயு இன்று பொலிஸார் மற்றும் நுகர்வோர் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத முறையில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்த நபர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மற்றும் நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

ஹெட்டன் பஸ் தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள கொரியர் சேவை வழங்கும் நிலையமொன்றிலிருந்தே குறித்த தொகை எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிலிண்டர்களில் 2 தசம் 5 கிலோ எடையுடைய 8 லாப் எரிவாயு சிலிண்டர்களும் 12 தசம் 5 கிலோ எடையுடைய 12 லாப் எரிவாயு சிலிண்டர்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *