மரத்தடி நிழலிலும் ஏசியில் மிளிரும் இவர்களுக்கு மக்களின் வேதனை புரியுமா? (படங்கள் இணைப்பு)

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் யோகா நிகழ்வொன்றை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தன.

குறித்த யோகா நிகழ்ச்சியில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பினரும் கலந்துகொண்டு யோகா செய்திருந்தனர்.

இந்தநிலையில், பிரதமர் ரணில் யோகா செய்தும் போது அவருக்கு பின்னால் காற்று குளிரூட்டும் கருவி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

நாட்டு மக்கள் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கும் வெயில், மழை, மோதல், துப்பாக்கிச் சூடு, உயிரிழப்புகள் என்று பாராமல் வரிசையில் காத்திருக்கின்றனர். வரிசையில் காத்திருப்பதே தற்போது பலருக்கு முக்கிய பணியாக மாறிவிட்டது.

மக்களின் அன்றாட நடவடிக்கைகள் யாவும் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் முதல் கர்ப்பிணி, முதியவர்கள் என ஒழுங்கான உணவு, உறக்கமின்றி அல்லலுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், நேற்று இடம்பெற்ற யோகா தினத்திற்கு குறைந்தது ஒருமணி நேரம் எனினும் இயற்கையோடு ஒன்றிக்காமல், அரசியல் தலைமைகளுக்கு காற்று குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருந்தமை மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் அன்றாட கஷ்டங்களை சற்றும் உணராத அரசியல்வாதிகள் நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவது சாத்தியமா என்ற சிந்தனையும் மக்கள் மத்தியில் தோன்றாமல் இல்லை.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *