15 வயதை கடந்தோருக்கு புதிய டிஜிட்டல் அடையாள அட்டை

15 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

Sri Lanka Unique Digital ID என அழைக்கப்படும் இந்த புதிய அடையாள அட்டையில் கைரேகை, வாழ்க்கை மற்றும் இரத்த வகை உள்ளிட்ட மேலதிகமாக உயிரியல் விஞ்ஞான தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சைபர் தளத்தில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு இந்திய அரசின் கடன் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

ஒன்றரை வருடத்திற்குள் 17 மில்லியன் மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *