மன்னாரில் அரியவகை புலியை வேட்டையாடிய நபர் கைது

மன்னார் – சிலாவத்துறை காட்டுப்பகுதியில் அரிய வகை புலி ஒன்றை கொலை செய்து அதன் தோல் மற்றும் பற்கலை தனது உடமையில் வைத்திருந்த அடிப்படையில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு, சிலாவத்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் உடமையில் புலியின் தோல் மற்றும் பற்கள் மீட்கப்பட்ட நிலையில், குறித்த நபர் புலியை கொலை செய்துள்ளார் என்ற அடிப்படையில், பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.

சந்தேக நபர் சார்பாக வாதிட்ட சட்டத்தரணி டினேஸன் குறித்த புலி சந்தேக நபரால் கொலை செய்யப்படவில்லை எனவும் இறந்த ஒரு புலியில் தோல்களையும் பற்கலையுமே குறித்த சந்தேக நபர் மீட்டு வைத்திருந்தார் எனவும் வாதிட்டுள்ளார்.

எனினும், சந்தேக நபர் உடமையில் வைத்திருந்த புலி தோலுக்குரிய புலியானது மிக அரிய வகை புலி என்பதன் அடிப்படையிலும் அவ்வாறான புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் சந்தேக நபரை எதிர்வரும் 30 வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *