எதிர்வரும் மூன்று தினங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் எதிர்வரும் மூன்று தினங்களில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 24,25ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, 24ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

25ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், 26ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *