சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது: தலிபான்கள்!

சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தலிபான் பிரதிநிதிகள் இந்த கருத்தினை வெளியிட்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலிபான் பிரதிநிதிகள், ‘சீனா நம்பகத்தன்மை மிகுந்த நாடு’ என தெரிவித்தனர்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறுகையில், ‘இந்தச் சந்திப்பின்போது தங்களுக்கும் ஜின்ஜியாங் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தலிபான்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று வாங் லீ நம்பிக்கை தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறுவது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதற்குப் பிறகு சீனாவுடன் தலிபான்கள் நடத்தியுள்ள முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

ஏற்கெனவே 95 சதவீத அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.

இது, சீனாவை கவலையடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியமைத்தால், சீனாவில் உய்கர் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்பினருக்கு அவர்கள் அடைக்கலஜின்ஜியாங் மாகாண அளிக்கலாம் என்று சீன அதிகாரிகள் எச்சரித்தனர்.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த தலிபான்கள், ‘சீனாவை எங்களது நட்பு நாடாகக் கருதுகிறோம். எனவே, அந்த நாட்டின் உய்கர் இனத்தைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்’ என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *