
திருகோணமலை – உப்புவெளி – கன்னியா பகுதியில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உப்புவெளி – கன்னியா மாங்காய் ஊற்று பகுதியிலேயே இன்று குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சகோதரிகள் இருவர் மாதாந்தம் சீட்டு பணம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் பணத்தை கொடுக்காமையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்காவின் கணவர் கோபம் கொண்டு தங்கையின் கணவரை கத்தியால் வெட்டியுள்ளதுடன் அதனை தடுப்பதற்கு சென்ற சக நண்பர்கள் இருவரும் கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்

