அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த கோரிக்கை

தேசிய சம்பளக் கொள்கையைப் பாதுகாக்காமல் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்தினால் அது ஒரு மோசமான நிலைக்கு வழிவகுக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசியச் சம்பளக் கொள்கைகள் பாதுகாக்கப்படாவிட்டால் 2003 ஆம் ஆண்டு போல் மீண்டும் மருத்துவ தொழிற்சங்க வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பிரனாந்து தெரிவித்துள்ளார்.

சம்பள அளவு விகிதாசரத்தை அதிகரிக்கவும், தேசிய சம்பளக் கொள்கையில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்யவும், பொது சேவைக்காக தேசிய கொடுப்பனவு கொள்கையை அறிமுகப்படுத்துமாரும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply