வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகாமையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (07) காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென எதிர் பக்கம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
அத்துடன் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னுமோர் காருடன் மோதியதில் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாவற்குளத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா போக்குவரத்து பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


