திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்ட நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அவ்வாணைக் குழுவின் அதிகாரி ஒருவர் கூறினார்.

பன்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வெளியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்த நிலையில் ஜனாதிபதி விசாரணைக்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

Leave a Reply