கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ.சு.கட்சியின் கொத்மலை பிரதேச குழுவினரின் ஏற்பாட்டில், கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

நேற்று (06.07.2021) கொத்மலை பிரதேச சபையில் இந்த இரத்த தான முகாம் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கொத்மலை பிரதேச சபை தலைவர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்ற நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு இப்பகுதியில் உள்ள பிரதேசவாசிகள் இரத்ததானம் வழங்கினர்.

குறித்த நிகழ்வில் 200ற்கும் மேற்பட்ட பிரதேச மக்கள் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

நுவரெலியா இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வுகள் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply