ஈரான் அணு பரிசோதனை முறைகளை அமெரிக்காவின் அனுமதியின்றியும், அமெரிக்காவின் கூட்டுச் சேர்வையின்றியும் முன்னெடுத்து செல்கின்றமை தொடர்பாக எச்சரிப்பை விடுத்த அமெரிக்கா அண்மையில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்து ஈரானை பெரும் பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளியிருந்தது.
இந்நிலையில் ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையானது அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்கும் விதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் மற்றும் ஈரானின் பொருளாதார அமைச்சர் தெரான் ஆகியோருக்கிடையிலான உரையாடலின் போது, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததாவது, “2015 ம் ஆண்டு ஈரான் மேற்கொண்ட அணு உற்பத்தி மற்றும் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தங்களை நாம் மீண்டும் தொடர ஆயத்தமாகவுள்ளோம். அத்துடன் ஈரானுடன் புதிய சக்திவள பரிமாற்றங்களையும், அணு பரிசோதனை முறைகளையும் மேற்கொள்ள ரஷ்ய விருப்பமாகவுள்ளது.
பாரிய அளவில் திட்டங்களை அமைத்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் ரஷ்யாவிடம் இருப்பதாகவும்” தெரிவித்த செர்ஜி க்கு ஈரான் அமைச்சர் தெரான் தமது வரவேற்பையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா எப்பொதும் தமது வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் அமைச்சர் தெரான் தெரிவித்திருந்தார்.

