இலங்கை- அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு தசுன் சானகவும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமைதாங்குகின்றனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே இலங்கை அணி, தொடரை வென்றுள்ளது.

இது 30 வருடங்களுக்கு பிறகு அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *