அரசாங்கத்திற்கு சுமார் 3 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு – வழக்கில் இருந்து குமார வெல்கம விடுதலை!

<!–

அரசாங்கத்திற்கு சுமார் 3 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு – வழக்கில் இருந்து குமார வெல்கம விடுதலை! – Athavan News

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து குமார வெல்கமவை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இலங்கை போக்குவரத்து சபையில் இல்லாத பிரதித் தலைவர் பதவியை உருவாக்கி அரசாங்கத்திற்கு சுமார் 3 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *