13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாதெழிக்க வேண்டும்: புத்தசாசன அமைப்பு

கொழும்பு, ஜுன் 24

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இல்லாது செய்யப்பட்டு, தேர்தல் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென புத்தசாசன செயற்பாட்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 13 ஆவது திருத்தத்தின் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவது தனியான ஒரு இராஜியத்தை உருவாக்குவதற்கு இடமளிக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சிக்கல்களை நிறைவேற்று அதிகார முறைமையே தற்போதைய நிலையில் கட்டுப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், நிறைவேற்று அதிகார முறைமை இல்லாது செய்யப்பட கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *